இறுக்கமான சுகாதார நடைமுறைகளின் கீழ் தேர்தலை நடத்தியமைக்காக தேர்தல் ஆணைக்குழுவை முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராட்டியுள்ளார்.
தேர்தலில் வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர்,
நாட்டில் விகிதாசார முறையில் இடம்பெறவுள்ள இறுதிதேர்தல் இதுவாகத்தானிருக்கும் என கருதுகின்றேன். நாங்கள் ஆட்சியிலிருந்தவேளை விகிதாசார பிரதிநிதித்துவம் அற்ற கலப்பு முறையொன்று குறித்து சிந்தித்திருந்தோம்.
அது குறித்து இணக்கப்பாடொன்றை உருவாக்குவதற்காக நாங்கள் முயற்சிகளை மேற்கொள்வோம்.
இதேவேளை, இறுக்கமான சுகாதார நடைமுறைகளின் கீழ் தேர்தலை நடத்தியமைக்காக தேர்தல் ஆணைக்குழுவிற்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
முன்னைய தேர்தல்களுடன் ஒப்பிடும்போது இந்த தேர்தலில் இணைய சமூக ஊடக பிரச்சாரங்கள் தனித்துவமானவையாக காணப்பட்டன. அவை தொடரும் என்றார்.