வெந்தயம், பாகற்காய் போலவே கற்றாழையும் அற்புத பலன்களை சர்க்கரை வியாதிக்கு கொடுக்கும்.
கற்றாழை எல்லா இடங்களிலும் கிடைக்கும் எளிமையான பொருள். வீட்டில் கூட கற்றாழையை எளிதாக வளர்க்கலாம்.
கற்றாழை தினமும் சாப்பிட்டால் குடல், கல்லீரல், சர்க்கரை சம்பந்தப்பட்ட நோய்கள் அனைத்தையும் சரியாகிவிடும்.
விட்டமின் ஏ, ஈ, சி, பி1, பி2, பி3, பி6, பி12, மற்றும் மினரல்கள் போன்றவை கற்றாழையில் காணப்படுகின்றன.
அதிகமாக அமினோ அமிலங்கள் இருப்பதால் சரும பாதிப்புகளை கற்றாழை குணப்படுத்தும் ஒரு மருந்தாக செயல்படுகிறது.
இதில் அதிகமாக இரும்பு மற்றும் காப்பர் இருப்பதால் உடலில் ஏற்படும் புண்களை ஆற்ற வல்லது.
கற்றாழை இதய பாதிப்புகளையும் வராமல் தடுத்து நிறுத்தும். அதிலுள்ள நார்ச்சத்துக்கள் இதயத்தில் படியும் கொழுப்புகளை கரைக்க உதவி செய்யும். இதனால் இதய நோய்கள் தடுக்கப்பட்டு விடும்.
கற்றாழையின் சதைப் பகுதியை எடுத்து நன்றாக கழுவிக் கொண்டு, குறைந்தது 6 முறை ஓடும் தண்ணீரில் கழுவ வேண்டும். பின்னர் அதனை சாப்பிடலாம். ஆரம்பத்தில் 1 ஸ்பூன் எடுத்துக் கொள்ள வேண்டும்.
போகப் போக தினமும் 3 ஸ்பூன் வரை கற்றாழையை எடுத்துக் கொள்ளலாம்ம. இது மிகவும் ஆற்றல் மிக்க இயற்கை மருந்தாக உள்ளது. கற்றாழையை ஜூஸாகவும் எடுத்துக் கொண்டு சாப்பிடலாம்.
பிரியாணி இலையை பொடி செய்து அதனுடன் சிறிது மஞ்சள் தூள், 2 ஸ்பூன் கற்றாழையின் ஜெல் போன்றவற்றை கலந்து சாப்பிடலாம். காலை இரவு என உணவிற்கு பின் இந்த மருந்தை உட்கொள்ள வேண்டும். சர்க்கரை உயராமல் இருக்கும்.
கசாயம்
- துளசி, வில்வம், வேப்பிலை, நெல்லி ஆகியவற்றை காய வைத்து எல்லாம் கலந்து பொடி செய்து வைத்துக் கொண்டு, பின்னர் நீரில் இந்த பொடியை சேர்த்து கற்றாழை ஜெல்லை 1 ஸ்பூன் சேர்த்து நன்றாக காய்ச்சி வடிகட்டி குடிக்கலாம்.
கற்றாழை ஜூஸ்
தேவையானவை
- கற்றாழை – ஒரு முழு இலை
- நீர்- 3 கப்
செய்முறை
- கற்றாழை இலையை இரண்டாக பிரித்து அதிலிருக்கும் ஜெல்லை ஒரு ஸ்பூனால் வழித்து எடுத்துக் கொண்டு, அதனை நன்றாக கழுவிய பின் அதனை மிக்ஸியில் ஒரு அடி அடித்த பின் நீர் கலந்து மீண்டும் மிக்ஸியில் அடித்து, இரண்டும் கலக்கும் வரை அரைத்துக் கொண்டால் கற்றாழை ஜூஸ் ரெடியாகி விடும்.
- சர்க்கரை நோய் விரைவில் விரட்டி அடிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் உடனடியாக தினமும் கற்றாழையை சாப்பிடலாம். ஒரு மாதத்தில் அவர்களின் சர்க்கரை அளவு குறைவதை இதை பயன்படுத்தியப் பின்னர் நீங்களே உணர்வீர்கள்.