Loading...
பிரான்ஸில் பல்கலைக்கழக சக நண்பிகளுடன் நீராட சென்ற ஈழத்தை பூர்வீகமாக கொண்ட மாணவி ஒருவர் கடந்த 03ஆம் திகதி திங்கட்கிழமை நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
அந்த நாட்டின் பல்கலைக்கழகத்துக்கு புதுமுக மாணவியாக தெரிவு செய்யப்பட்ட நிலையில் ஐந்து சக மாணவிகளுடன் கடலில் நீராட சென்ற போது குறித்த தமிழ் மாணவி கடலின் அலையில் சிக்குண்டு உயிரிழந்த நிலையில் ஏனைய மாணவிகள் உயிர் ஆபத்து இன்றி தப்பியுள்ளனர்.
Loading...
சம்பவத்தில் யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியை பூர்வீகமாக கொண்ட இரஞ்சன் அனித்திரா (19) என்ற மாணவியே உயிரிழந்தவர் ஆவார்.
Loading...