முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்யக்கோரி நளினி தொடர்ந்த வழக்கு விசாரணை ஜனவரி 9-ம் திகதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் நளினி அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், 25 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கும் தன்னை விடுதலை செய்யக் கோரி நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். அதில், அரசியலமைப்பு சட்டம் 101- ஐ பயன்படுத்தி தன்னை விடுதலை செய்ய வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நளினி மனு தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க அவகாசம் அளித்ததையடுத்து, வழக்கின் விசாரணையை ஜனவரி 9-ம் திகதிக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.