திறமைகள் வெளிப்படும் நாள். மருத்துவச் செலவுகள் குறைந்து மனநிம்மதியைத் தரும். தொழில் நலன் கருதி எடுத்த முயற்சி கைகூடும். அரசு வழி அனுகூலம் உண்டு. வாங்கல் கொடுக்கல்கள் ஒழுங்காகும்.
பொறுமையோடு செயல்பட வேண்டிய நாள். பிள்ளைகளின் நலனில் பெரிதும் அக்கறை காட்டுவீர்கள். வருமானம் திருப்தி தரும். தொழிலில் மாற்றம் செய்யலாமா என்ற சிந்தனை மேலோங்கும்.
பெற்றோர் வழியில் பிரியம் கூடும் நாள். நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். வாகனத்தைப் பராமரிக்கும் எண்ணம் மேலோங்கும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களின் உபத்திரவங்கள் அகலும்.
பொருளாதார நிலை உயரும் நாள். மனதில் புதிய எண்ணங்கள் தோன்றிக் கொண்டேயிருக்கும். இளைய சகோதரத்தின் வழியில் உதவிகள் கிடைக்கும். தொழிலில் கூட்டாளிகளால் நன்மை உண்டு.
வியாபார விருத்தி ஏற்படும் நாள். பழைய பாக்கிகள் வசூலாகி பணவரவைக் கூட்டும். தொலை தூரப் பயணங்களால் மகிழ்ச்சி ஏற்படும். கோவில் வழிபாட்டால் குதூகலம் காண இயலும்.
அரசியல்வாதிகளால் அனுகூலம் ஏற்படும் நாள். தொழில் ரகசியங்களை வெளியில் சொல்லாதிருப்பது நல்லது. குடும்பத்தில் பெரியவர்களின் யோசனைகளைக் கேட்டு நடப்பதன் மூலம் மகிழ்ச்சி ஏற்படும்.
பக்குவமாகப் பேசிப் பாராட்டுக்களைப் பெறும் நாள். உற்றார், உறவினர்கள் சிலர் பணம் கேட்டு நச்சரிக்கலாம். உத்தியோக நலன் கருதி ஊர்மாற்றம் செய்யும் எண்ணம் மேலோங்கும்.
சொல்லைச் செயலாக்கிக் காட்டும் நாள். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும். தொழில் முன்னேற்றம் கருதிப் பயணமொன்றை மேற்கொள்வீர்கள். பெரிய மனிதர்களின் சந்திப்பு கிட்டும்.
மனதிற்கினிய சம்பவங்கள் நடைபெறும் நாள். தொழிலில் புதிய முதலீடுகள் செய்யும் எண்ணம் மேலோங்கும். புண்ணிய காரியங்களில் நாட்டம் செல்லும். வீடுகட்டும் பணிகளுக்கு அஸ்திவாரமிடுவீர்கள்.
காலையிலேயே கலகலப்பான தகவல் வந்து சேரும் நாள். தந்தை வழியில் ஏற்பட்ட விரிசல் மறையும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டும் எண்ணம் உருவாகும். புண்ணிய காரியங்களில் நாட்டம் செலுத்துவீர்கள்.
விரயங்கள் மேலோங்கும் நாள். குடும்ப உறுப்பினர்களிடம் கோபமாகப் பேசிவிட்டுப் பிறகு வருத்தமடைவீர்கள். உத்தியோக மாற்றம் ஏற்படலாம். தொலைபேசி வழித்தகவல் தொல்லை தருவதாக அமையும்.
வரவு திருப்தி தரும் நாள். எதிரிகள் உதிரியாவர். வாழ்க்கைத்துணை வழியே மகிழ்ச்சி தரும் செய்தியொன்று வந்து சேரும். தொழில் பங்குதாரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.