மஹிந்த தலைமையில் மக்களுக்கு ஏற்ற ஆட்சியை விரைவில் நாம் அமைப்போம் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச உறுதி கூறியுள்ளார்.
ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றின் போது ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும், எனது கடவுச்சீட்டும் தடைசெய்யப்பட்டு விட்டது, அதேபோல எனது பாட்டி மற்றும் தம்பியின் கடவுச்சீட்டுகளும் தடை செய்யப்பட்டு விட்டது.
நல்லாட்சி தொடங்கியது மத்திய வங்கி ஊழலிலேயே இந்த ஊழலினால் 135 பில்லியன் நாட்டிற்கு இழப்பு. ஆனால் அதனை விட்டு விட்டு எம்மை மட்டும் குறிவைத்துள்ளார்கள்.
அனைத்து வகையிலும் பொறுத்தமற்ற ஆட்சியையே இப்போதைய அரசு செய்து வருகின்றது. புதிய அரசியல் அமைப்பிலும் எந்த விதமான நன்மைகளும் இல்லை.
இது உண்மையில் நல்லாட்சியே இல்லை. இது அசுத்தமான ஆட்சி நாம் மஹிந்த ராஜபக்ச தலைமையில் கூடிய விரைவில் புது ஆட்சியை அமைப்போம் எனவும் நாமல் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.