எதிர்வரும் மாத ஆரம்பத்தில் அமைச்சரவையில் திருத்தம் மேற்கொள்வதற்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் அண்மையில் கலந்துரையாடல் மேற்கொண்டுள்ளதாக அரசாங்க தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
அமைச்சுக்கள் பலவற்றின் அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களுக்கு இடையில் காணப்படுகின்ற அதிகார போராட்டத்தை நிறைவு செய்யும் வகையில் இந்த அமைச்சரவை திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொது மக்களிடம் இருந்து அமைச்சர்கள், ராஜாங்க அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் சிலருக்கு எதிராக கிடைத்துள்ள முறைப்பாடு தொடர்பில் அரச தலைவர்கள் இருவரும் கடுமையான அவதானத்தை செலுத்தியுள்ளனர்.
அது அமைச்சரவை உட்பட அரசாங்கத்தை நடத்தி செல்வதற்கு பாரிய தடையாக உள்ளதென்பது ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கருத்தாகும்.
புதிய அரசியலமைப்பு திருத்தச்சட்டத்தை சமர்ப்பித்துக் கொள்ளுதல் போன்ற முக்கிய நடவடிக்கைகள் அடுத்த வருடம் ஆரம்பத்தில் மேற்கொள்ளப்படவுள்ளது. அதற்கு வலுவாக முகம் கொடுக்க கூடிய வகையில் செயற்பட வேண்டிய முறை தொடர்பில் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரதி அமைச்சர்கள் இருவரும், இராஜாங்க அமைச்சர்கள் இருவரும், அமைச்சரவை அமைச்சர்கள் 4 பேரின் பதவிகளில் மாற்றம் செய்தல் மற்றும், இராஜாங்க அமைச்சர் ஒருவருக்கு அமைச்சரவை அமைச்சர் பதவி வழங்குவது தொடர்பிலும் இரண்டு தலைவர்களும் அவதானம் செலுத்தியுள்ளனர்.