பேஸ்புக் பாவனை குறித்து அவதானத்துடன் இருக்க வேண்டும் என இலங்கை கணினி அவசர தொடர்பாடல் வலையமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
பேஸ்புக் தொடர்பில் கடந்த 11 மாத காலப்பகுதியில் 2 ஆயிரத்து 100 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தகவல்துறை பொறியிலாளர் ரொஷான் சந்திரகுப்தா குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, போலியான முகப்புத்தகம் தொடர்பில் அதிக முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், புகைப்படங்களைப் பயன்படுத்துவது தொடர்பிலேயே முறைப்பாடு கிடைக்கப் பெற்றவர்களில் பெரும்பாலானோர் அசௌகரியத்துக்கு முகங்கொடுத்துள்ளனர்.
அத்துடன், தமக்கு அறிமுகமில்லாதவர்களே, பெரும்பாலானோரின் நண்பர் குழாமில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே பாதுகாப்பை பெறுவதற்கு, முகப்புத்தக பாவனையாளர்கள் தமக்கு தெரிந்தவர்களை தமது நண்பர் குழாமில் இணைத்துக்கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், தம்மால் பதிவேற்றப்படும் புகைப்படங்களை தமது நண்பர்கள் அல்லது தமக்குத் தேவையானர்கள் மட்டும் பார்க்கக்கூடியவாறு தனியுரிமை செய்ய வேண்டும் என்றும் ரொஷான் சந்திரகுப்தா அறிவுறுத்தியுள்ளார்.