இங்கிலாந்தை துவம்சம் செய்த கோஹ்லி தலைமையிலான இந்திய அணிக்கு உச்ச நீதிமன்ற உத்தரவால் கிடைக்க வேண்டிய ஊக்கத்தொகை கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்தியா சென்றுள்ள இங்கிலாந்து அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. இதில் இங்கிலாந்து வீரர்களை புரட்டியெடுத்த இந்திய அணி, 4-0 என டெஸ்ட் தொடரை வென்றது.
எப்போதும் ஒரு கிரிக்கெட் தொடர் முடிந்ததும், அத்தொடரில் இந்திய வீரர்களின் செயல்பாடுகளை ஆராய்ந்து, சம்பளத்தை தவிர்த்து, கூடுதலாக ஊக்கத்தொகை வழங்குவது இந்திய கிரிக்கெட் வாரியத்தின் வழக்கமாகும்.
இந்நிலையில், தற்போது லோதா குழுவுடனான மோதலால், கிரிக்கெட் வல்லரசான பி.சி.சி.ஐ., யின் கையில் பணம் இல்லாமல் கட்டப்பட்டுள்ளதால். இந்த முறை ஊக்கத்தொகையை அமல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதனால், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி வீரர்கள் சிறப்பாக செயல்பட்ட போதும் இந்த ஊக்கத்தொகை கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
கடந்த 2015ல் தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான தொடரை வென்ற போது கோஹ்லி தலைமையிலான சீனியர் வீரர்களுக்கு ரூ.2 கோடி ஊக்கத்தொகை கிடைத்தது குறிப்பிடத்தக்கது.