முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மற்றும் ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற தொலைபேசி உரையாடல் பதிவு தொடர்பான காணொளிப்பதிவு அண்மையில் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டது.
குறித்த காணொளி வெளியிடப்பட்டதன் பின்னர் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வந்த நிலையில்,மக்கள் மத்தியில் பல சர்ச்சைகளையும் ஏற்ப்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் குறித்த காணொளி கடந்த 18ஆம் திகதி சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டது.
குறித்த காணொளிப்பதிவு வெளியிடப்பட்ட மூன்று நாட்களில் youtube முன்னணி காணொளிகளில் குறித்த 10 ஆவது இடத்தை பிடித்துள்ளது.
மேலும், 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்வையிட்டுள்ளனர் என்றும் கொழும்பு ஊடகம் ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, குறித்த தொலைபேசி உரையாடல் உண்மை தான் என முன்னாள் ஜனாதிபதி ஒப்புக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.