வயிற்றினைச் சுற்றி தொப்பை வருவதற்கு முக்கிய காரணம் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை தான். ஆனால் தற்போது மிக எளிதாக வெறும் 15 நிமிடங்களில் தொப்பையை குறைத்துவிடலாம்.
பேக் எக்ஸ்டென்ஷன் ஸ்ட்ரெச் (Back Extension Stretch)
இந்த பயிற்சிக்கு முதலில் குப்புற படுக்க வேண்டும். பின், கைகளை ஊன்றிய படி தலை மற்றும் மேல் உடலை உயர்த்தி, மெதுவாக மூச்சை இழுத்துவிட்டு, பின்னர் பழையநிலைக்கு திரும்ப வேண்டும். இது போல மூன்று முறை செய்ய வேண்டும்.
பலன்கள்
இந்த பயிற்சியினால், முதுகுத் தண்டு நேராவதோடு, கை, நெஞ்சு, வயிற்றுப் பகுதியில் உள்ள தசைகள் ஃபிட்டாகும். மேலும், உடல் முழுவதும் ரத்த ஓட்டம் சீரான முறையில் பரவும்.
அப்பர் ஆப் கன்ட்ரோல் (Upper Ab Control)
இந்த முறை தரையில் கால்களை நேராக நீட்டிப் படுத்து கால் முட்டியை மடக்கிவைத்துக் கொண்டு, தலை மற்றும் மேல் உடலை உயர்த்தி, கைகளால் முட்டியைத் தொட வேண்டும். இவ்வாறு சில விநாடிகள் இருக்க வேண்டும். இப்படி, மூன்று முறை செய்ய வேண்டும்.
பலன்கள்
கீழ் வயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பைக் கரைத்துச் சதைப்பகுதியை உறுதியாக்கும். மேலும், கீழ் உடல் பகுதியில் இருந்து மேல் உடலுக்கு ரத்த ஓட்டம் சீராகப் பாயும். தொடைப் பகுதி ஃபிட் ஆகும்.
கூல் ரிலாக்ஸ் (Cool Relax)
இதில், தரையில் கால்களை சற்று அகட்டியபடி மல்லாந்து படுத்துக் கொண்டு கைகளை பின்புறம் வைத்துக் கொண்டு, முதுகு மற்றும் தலை தரையில் படுமாறு மெதுவாக மூச்சை இழுத்துவி வேண்டும்.
பலன்கள்
இடுப்பு, தொடை, முதுகுத்தண்டில் ஏற்படும் வலி நீங்கும். உடல் முழுவதும் சீரான ரத்த ஓட்டம் பரவும்.