பிரபலங்கள் சாதாரன விஷயங்களை செய்தாலே அது பிரளயமாக வெடிக்கும், வைரலாக பரவும். இதுவே அவர்கள் சர்ச்சைக்குரிய விஷயங்களை பேசினாலோ, செயல்களில் ஈடுப்பட்டாலோ அது தான் பல மாதங்கள் தலைப்பு செய்தியாக நீடிக்கும். இந்த வருடமும் இது போல பலர் தங்கள் கருத்தாலும், செயலாலும், சமூக ஊடகத்தின் கைகளில் சிக்கியும் சர்ச்சைகளை சந்தித்தனர். அவர்கள் யார் யார்? அவர்கள் சந்தித்த சர்ச்சைகள் என்னென்ன என்று இங்கு காணலாம்…
தொடர்ந்த பீப் சாங் வழக்குகள்!
தானாக வெளியிடாமல், யாரோ திருடி கசியவிட்ட பீப் சாங் மூலம் பெரும் சர்ச்சைக்குள்ளானார் சிம்பு. சென்ற டிசம்பரில் ஆரம்பித்த இந்த விவகாரம். இந்த வருட ஆரம்பத்தில் பல மாவட்டங்களில் வழக்கு தொடரப்பட்டு பூதாகரமாக வெடித்து சிம்பு அனிருத் மீது பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது.
ஜி.வி பிரகாஷ் ட்வீட்!
நடிகர் அஜித்தை மறைமுகமாக கிண்டலடிப்பது போல அமைந்த ஜி.வி-யின் ட்வீட் காரணமாக அஜித்தின் ரசிகர்கள் ஜிவிக்கு எதிராக ட்வீட் மழை பொழிந்தனர். இதன் காரணத்தால் அவர் அந்த ட்வீட்டையே நீக்கினார். இது மட்டுமல்ல, இவ்வருடம் ட்விட்டரில் பலமுறை சர்ச்சையாக ட்வீட் செய்து ரசிகர்கள் மத்தியில் சிக்கினார் ஜி.வி
நாஞ்சில் சம்பத்!
“என்றாவது ஒருநாள் மக்கள் முன் தோன்றும் முதல்வர்” என ஒரு பேட்டியில் கருத்து தெரிவித்து பெரும் சிக்கலுக்கு உள்ளாகி. தனது பதவிகளை இழந்தார் நாஞ்சில் சம்பத்!
கமல் அனுதாபங்கள்!
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இரங்கல் பதிவில், சான்றோருக்கு என் அனுதாபங்கள் என கமல் வெளியிட்ட ட்வீட் பெரும் சர்ச்சைக்குள்ளானது.
வைகோ தாக்கு!
சென்ற தேர்தலின் போது கலைஞர் கருணாநிதியை ஜாதி குறிப்பிட்டு தாக்கி பேசி பெரும் சர்ச்சையில் சிக்கினார் வைகோ. இதற்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பும் கேட்டார்.
தனுஷ்!
அமலா பால் – விஜய் விவாகரத்தில் துவங்கியது தனுஷ் பெயரில் பரவிய சர்ச்சைகள். யார் விவாகரத்து ஆனாலும், பிரிந்தாலும் அதற்கு தனுஷ் தான் காரணம் என்பது போல மீம்கள் போட்டு அவரை கலாய்த்து தள்ளினர்.
கருணாநிதி மரணம்?!
ஜெயலலிதா, சோவின் மரணங்கள் தொடர்ந்து கருணாநிதியும் இறந்துவிட்டார் என சர்ச்சையான பதிவுகள் பரவின. இதை பிரபல செய்தி சேனல் தான் வெளியிட்டது என போலி பதிவுகளும் பரவின.
ஸ்ரீபிரியா – குஷ்பூ – நிஜங்கள்!
குடும்ப சண்டை தீர்க்கும் நிகழ்ச்சியல் குஷ்பு சட்டையை பிடித்த சம்பவம் சர்ச்சைக்குள்ளானது. இதன் பிறகு நடிகை ஸ்ரீப்ரியா, நடிகைகளுக்கு எதற்கு இந்த வீண் வம்பு. குடும்ப சண்டைகளை தீர்க்க நீங்கள் யார் என கேள்வி எழுப்பினார்.
சரத் – ராதாரவி!
நடிகர் சங்கத்தில் ஊழல் செய்தனர் என சரத் – ராதாரவி இடை நீக்கம் செய்யப்பட்டனர். இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு, வழக்கு நீதி மன்றத்தில் இருக்கும் போதே, அவர்களை பொதுகுழுவின் போது நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கி பெரும் சர்ச்சை வெடித்தது.