கடந்த 2006ஆம் ஆண்டு இன்றைய நாளில் வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை சிறுவர் இல்ல வளாகத்தில் சிறிலங்கா விமானப்படை விமானங்கள் நடத்திய மிலேச்சத்தனமான தாக்குதலில் கொல்லப்பட்ட அப்பாவி பாடசாலை மாணவர்கள் மற்றும் பணியாளர்களது 14 வது ஆண்டு நினைவு நாள் இன்றாகும்
இன்றைய நாளில் குறித்த படுகொலை நிகழ்வின் 14வது ஆண்டு நினைவு நிகழ்வு செய்வதற்கு புதுக்குடியிருப்பு பொலிசாரினால் தடை விதிக்கப்பட்ட போதிலும் போலீசாரின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்ட நிலையில் இராணுவத்தினரின் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் செஞ்சோலை வளாகத்தில் உயிரிழந்த மாணவர்களின் 14ம் ஆண்டு நினைவு கொண்டு உறவினர்களால் கட்டங்கட்டமாக சுடர் ஏற்றி மலர் தூவி வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது
நிகழ்வு செய்வதற்கு போலீசார் முற்றாக தடை விதித்துள்ளதுடன் குறித்த பகுதிகள் எங்கும் ராணுவத்தினர் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.