போங்கடா நீங்களும் உங்கள் இனவாதமும், கொல்லப்பட்ட செஞ்சோலைச் சிறுவர்களுக்கு நாங்கள் அஞ்சலி செலுத்தியே தீருவோம் என்று வடகிழக்கு மக்கள் அஞ்சலிகளை செய்துள்ளார்கள். தேர்தலில் பெரும் வெற்றிபெற்றுள்ள மகிந்த தரப்பு, தற்போது தமிழ் முஸ்லீம்கள் மீது கடும் கெடுபிடிகளை கட்டவிழ்த்து விட்டுள்ளது. ஏதோ இலங்கை சிங்கள மக்களுக்கு மட்டுமே சொந்தம் என்பது போன்ற ஒரு தோற்றப்பாட்டை கொண்டு வந்துள்ளார்கள்.
இன் நிலையில் செஞ்சோலை படுகொலைகளின் நினைவேந்தல் நடக்க இருந்தது. ஆனால் தனை நடத்த அனுமதி இல்லை என்று பஷில் ராஜபக்ஷ தெரிவித்து இருந்தார். இதனை அடுத்து பொலிசாருக்கு கடுமையான உத்தரவுகள் போடப்பட்டது. முல்லைத்தீவு வள்ளிபூனம் பகுதியில் கடந்த 2006ம் ஆண்டு, ஆகஸ்ட் 14 அன்று இலங்கை வான் படை நடத்திய தக்குதலில் 54 சிறார்கள் கொல்லப்பட்டார்கள்.
இன் நிகழ்வு ஒவ்வொரு வருடமும் இடம் பெற்று வருகிறது. ஆனால் இம்முறை இதனை தடுக்க என பொலிசார் அங்கே குவிக்கப்பட்டு இருந்த நிலையில். சிவாஜிலிங்கம், செல்வம் அடைக்கல நாதன் போன்றவர்கள் பொலிசாருடம் பெரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள். இறுதியாக , அஞ்சலி நிகழ்வுகளை நடத்திவிட்டு தான் அங்கே இருந்து சென்றுள்ளார்கள்.