Loading...
தகவல் அறியும் உரிமைகள் தொடர்பான ஆணைக்குழுவிற்கு மேலும் இரண்டு புதிய உறுப்பினர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார்.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் முன்னாள் தலைவர் ஏ.டப்ளியூ.ஏ. சலாம் மற்றும் கலாநிதி. திருச்சந்திரன் ஆகியோரே புதிய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
Loading...
ஜனாதிபதி செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வில் இவர்கள் ஜனாதிபதியிடம் இருந்து நியமனக் கடிதங்களை பெற்றுக்கொண்டதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதனிடையே பதில் பிரதம நீதியரசராக உயர்நீதிமன்ற நீதியரசர் பியசாத் டெப் ஜனாதிபதி முன்னிலையில் இன்று பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
Loading...