Loading...
கூகுள் நிறுவனமானது தனது குரோம் உலாவியின் புதிய பதிப்பு ஒன்றினை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.
குரோம் 86 எனப் பெயரிடப்பட்டுள்ள இப் புதிய பதிப்பில் சில புதிய வசதிகள் தரப்பட்டுள்ளன.
அவற்றில் முக்கியமாக இணையத்தளங்களின் URL இனை மறைக்கக்கூடிய வசதி தரப்பட்டுள்ளது.
இதற்கு பதிலாக குறித்த இணையத்தளத்தின் Domain பெயர் மாத்திரமே காண்பிக்கப்படவுள்ளது.
Loading...
URL ஊடாக ஹேக்கர்கள் பயனர்களின் கணினிகளில் ஊடுருவும் சந்தர்ப்பங்கள் அதிகமாக காணப்படுகின்றது.
இதனை தடுக்கும் நோக்கிலேயே இப் புதிய உத்தியை கூகுள் கையாளவுள்ளது.
எனினும் பயனர்கள் தமது விருப்பத்திற்கு ஏற்றவாறு URL இனை காண்பிக்கக்கூடியவாறு மாற்றியமைக்கும் வசதியும் குறித்த உலாவியில் தரப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...