பிரித்தானிய ராணியார், இளவரசர் வில்லியம்- கேட் தம்பதி உள்ளிட்டவர்களை மிகவும் இழிவாக விமர்சித்த டுவிட்டர் பக்கத்திற்கு தொடர்புடைய நபரை தொலைபேசியில் அழைத்து ஹரி- மேகன் தம்பதி நன்றி தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த சர்ச்சைக்குரிய டுவிட்டர் பக்கத்திற்கு தொடர்புடைய பெண்மணி, ஹரி- மேகன் தம்பதியின் தொண்டு நிறுவனத்திற்கு இதுவரை சுமார் 45,000 பவுண்டுகள் தொகையை திரட்டி அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாகவே, ஹரி- மேகன் தம்பதி குறித்த பெண்மணியை தொடர்பு கொண்டு பாராட்டியதாக தெரியவந்துள்ளது.
Dani Trin என்பவரே ஹரி- மேகன் தம்பதியின் தொண்டு நிறுவனத்திற்காக நிதி திரட்டியவர். இவரின் டுவிட்டர் பக்கத்தில் இருந்தே பிரித்தானிய அரச குடும்ப உறுப்பினர்கள் மீது இழிவான விமர்சனம் முன்வைக்கப்பட்டது.
ஆனால் தற்போது அந்த விமர்சனங்களுக்கு தாம் பொறுப்பல்ல என Dani Trin மறுப்பு தெரிவித்துள்ளார்.
மேலும், குறிப்பிட்ட டுவிட்டர் பக்கத்தில் இருந்து ராணியார், வில்லியம்- கேட் தம்பதி உள்ளிட்ட அரச குடும்பத்தினரை இழிவாக விமர்சனம் செய்தவர் Dani Trin என்பது ஹரி- மேகன் தம்பதிக்கு தெரியாமல் இருக்கலாம் என்ற வாதமும் முன்வைக்கப்படுகிறது.
காரணம், சமீபத்தில் அமெரிக்காவில் வைத்து டுவிட்டர் பக்கம் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் வெறுப்பை விதைப்பதாக கடுமையாக விமர்சித்திருந்தார் ஹரி.
மட்டுமின்றி, பெரும் நிறுவனங்கள் சமூக ஊடகங்களுக்கு விளம்பரங்களால் உதவுவதை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் ஹரி முன்வைத்தார்.
இதனிடையே, ஆகஸ்டு 6 ஆம் திகதி முதல் Dani Trin-ன் டுவிட்டர் பக்கம் முடக்கப்பட்டுள்ளது. போர்த்துகல் நாட்டில் லிஸ்பன் பகுதியை சேர்ந்த Dani Trin தற்போது ஹரி- மேகன் தம்பதி மீது தமக்கு இருந்த மரியாதை அதிகரித்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
சில நிமிடங்கள் மட்டுமே தம்முடன் அவர்கள் பேசியிருந்தாலும், அது புது உற்சாகத்தை தமக்கு அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்ச்சைக்குரிய அந்த டுவிட்டர் பக்கமானது ஒரு குழுவினர் இணைந்து பராமரித்து வந்ததாகவும், அதில் ஒருவரின் இழிவான கருத்துக்கு தாம் பொறுப்பேற்க முடியாது எனவும் Dani Trin தெரிவித்துள்ளார்.