Loading...
டெங்கு நோயால் பாதிக்கப்பட்டு மரணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அண்மைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
டெங்கு காய்ச்சல் ஏடிஸ் என்னும் கொசுவினால் பரவக்கூடிய ஒரு வைரஸ் கிருமியால் ஏற்படுகிறது
உடல் சோர்வு, தீவிர தலைவலி, உடல் வலி, கண் வலி, தசைகள் மற்றும் மூட்டு வலி, வாந்தி, உடலில் சிவப்பு தழும்பு, எலும்பு உடைவது போன்று கடுமையான வலி போன்றவை இவற்றின் அறிகுறிகள் ஆகும்.
Loading...
டெங்கு நோயினை முன்னரே இனங்கண்டு உரிய சிகிச்சையளிப்பதன் மூலம் டெங்கு நோயில் இருந்து விடுதலை பெற முடியும்.
அந்தவகையில் டெங்கு காய்ச்சலில் இருந்நது விடுபட வேண்டுமாயின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை சாப்பிட்டாலே போதும். தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.
- வெறும் இரண்டு பப்பாளி இலைகள் போதும். ஆம். இரண்டு பப்பாளி இலைகளை நசுக்கிப் சாறு பிழிந்து எடுத்துக்கொள்ள வேண்டும். தினமும் காலை, இரவு என இரண்டு வேளைகளிலும் இந்தச் சாற்றை இரண்டு ஸ்பூன் சாப்பிட்டால் டெங்கு காய்ச்சல் இருந்த இடம் தெரியாமல் ஓடும்.
- ஆரஞ்சுப் பழத்தில் விட்டமின் சி உள்பட ஏராளமான சத்துகள் உள்ளன. இவை செரிமானத்திற்கு மட்டுமல்ல சிறுநீர் மட்டுப்படுவதை கட்டுப்படுத்தும். இதனால் தான் டெங்கு காய்ச்சலில் இருந்து விடுபடவும் ஆரஞ்சு உதவுகிறது.
- டெங்கு காய்ச்சலால் உயிருக்கே போராடிக் கொண்டிருப்பவர்கள் கூட கஞ்சி குடித்தால் புத்துயிர் பெறுவார்கள். அவ்வளவு சத்துகள் கொண்டது கஞ்சி.
- உடல் சூட்டைத் தணிப்பதில் இளநீருக்கு தனிப்பங்கு உண்டு. அப்படிப்பட்ட இளநீர் டெங்குவை விரைவில் குணமாக்கும். இதில் இருக்கும் கனிமச் சத்துகள் டெங்குவை மிக விரைவில் குணமாக்கும்.
- கேரட், வெள்ளரி போன்ற காய்களையும், ஸ்ட்ராபெர்ரி, கொய்யாப்பழம், எலுமிச்சைப்பழம், கிவி போன்ற பழங்களையும் சாறு எடுத்துக் குடித்தால் நோய் எதிர்ப்புச் சக்தியும் அதிகரிக்கும். டெங்குவும் விரைவில் குணமாகும்.
- புரோட்டீன் அதிகமுள்ள உணவுகளை உண்பதாலும் டெங்கு காய்ச்சலை விரட்டலாம். பால், முட்டை, மீன், சிக்கன் ஆகியவற்றை சாப்பிடுவது நலம்.
- பல வகையான சூப்புகளைச் சாப்பிடுவது டெங்கு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. உடம்பிற்குத் தெம்பு கிடைக்கவும், எலும்புகள் வலுப் பெறவும் சூப்புகள் உதவுகின்றன. அவை பசியைப் போக்குவதோடு, நாவிற்குச் சுவையையும் தருகின்றன.
Loading...