Loading...
இலங்கை தமிழரசு கட்சியின் அரசியற்குழுக் கூட்டம் இன்று திருகோணமலையில் இடம்பெற்று வருகிறது.
குறித்த சந்திப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் இல்லத்தில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
Loading...
இந்த கூட்டத்தில் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, கட்சியின் செயலாளர் துரைராஜசிங்கம், நிர்வாகச் செயலாளர் குணநாயகம், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சிவஞானம் சிறீதரன், வடமாகாணசபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், வடமாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் பி.சத்தியலிங்கம், சட்டத்தரணி கே.வி.தவராஜா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
குறித்த சந்திப்பில் கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் மற்றும் கட்சி சார்ந்த பிரச்சினைகள் என்பன தொடர்பில் ஆராயப்படலாம் என தெரியவருகிறது.
Loading...