ஆபாச வீடியோக்களை வாட்ஸ் அப்பில் அனுப்பி டார்ச்சர் செய்தவனை நேரில் வரவழைத்து, போலீசார் இடம் பிடித்துக் கொடுத்துள்ளார் சென்னையை சேர்ந்த ஒரு பெண்.
சென்னை அரும்பாக்கத்தில் வசித்து வரும் 50 வயதான ஒரு பெண்ணுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அந்த இரண்டு மகள்களுக்கும் திருமணம் ஆன நிலையில், அதில் ஒரு மகள் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தாயுடன் அரும்பாக்கத்தில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், அந்தப் பெண்ணுக்கு அடையாளம் தெரியாத மர்ம நபரிடமிருந்து கடந்த 4ஆம் தேதி முதல் அழைப்புகளும், பின் அந்த அழைப்புகளில் தகாத வார்த்தை கொண்டும் மர்ம நபர்கள் பேசியுள்ளனர். பல எண்களில் இருந்தும் அந்த எண்ணுக்கு தொந்தரவுகள் வந்துள்ளது.
கடந்த 4 நாட்களுக்கு முன்பு அந்த பெண்ணின் வாட்ஸ் அப்புக்கு பல ஆபாச வீடியோக்கள் வந்ததைக் கண்டு அந்தப் பெண் அதிர்ச்சி அடைந்துள்ளார். இது குறித்து தன் தாயாரிடம் தெரிவிக்கவே, ஒரு ரகசியத் திட்டம் தீட்டி ஆபாச வீடியோ அனுப்பிய நபரை தங்களது வீட்டுக்கு அழைத்து உள்ளனர்
அதனை நம்பிய அந்த மர்ம நபர் அந்த பெண்ணின் வீட்டுக்கு வரவே, அப்போது மறைந்து இருந்த குடும்பத்தினர் அவனை பிடித்து தர்மஅடி கொடுத்து போலீசில் பிடித்து கொடுத்தனர்.
போலீசாரின் விசாரணையில், ஆபாச வீடியோக்களை அனுப்பியவர் திருத்தணியை சேர்ந்த விமல்ராஜ் என்பது தெரியவந்தது. மேலும், விமல் ராஜ் ஆன்லைன் டெலிவரி பாயாக வேலை பார்த்து வருகிறார் என்றும், அப்போது அவர் கண்ணில் மட்டும் செல்பேசி எங்களுக்கு அழைத்து, எதிர்முனையில் பேசுபவர் பெண்ணாக இருக்கும் பட்சத்தில் அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பதை வழக்கமாக கொண்டு வந்ததும் தெரியவந்துள்ளது.