Loading...
மட்டக்களப்பு, கல்குடா ரயில் கடவையில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கல்குடா பொலிசார் தெரிவித்தனர்.
சனிக்கிழமை மாலை மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற சரக்கு ரயிலுடன் கன்டர் ரக வாகனமொன்று மோதியதால் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்து ரயில்வே பாதுகாப்பு கடவையினையும் உடைத்துக் கொண்டு எதிரே வந்த ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
Loading...
இதன் போது மட்டக்களப்பு சேத்துக்குடாவைச் சேர்ந்த செபஸ்ரியன் அருள்நாதன் (48) என்பர் உயிரிழந்துள்ளார்.
Loading...