Loading...
மொஹமட் அலி சப்றி நீதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய உள்ளதாக சிங்களே அமைப்பின் தலைவர் மெடில்லே பஞ்ஞாலோக்க தேரர் தெரிவித்துள்ளார்.
அலி சப்றி நீதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளதன் மூலம் தனது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாகவும் தேரர் குறிப்பிட்டுள்ளார்.
Loading...
தனக்கு எதிராக அலி சப்றி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதால், அவருக்கு நீதியமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளதன் மூலம் தனக்கு பாதிப்பு ஏற்படும் எனவும் அவர் பஞ்ஞாலோக்க தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கு எதிராக தான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Loading...