மறைந்த பாலிவுட் நடி்கர் சுஷாந்த் சிங்கின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் இறந்த நேரத்தை குறிப்பிடவில்லை என அவர்களது குடும்ப வழக்கறிஞர் குற்றம்சாட்டியுள்ளார்.
கடந்த யூன் 14ம் திகதி மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் சுஷாந்த் சிங் ராஜ்புத்.
இவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக ரசிகர்கள் மற்றும் குடும்பத்தினர் தொடர்ந்து சிபிஜ விசாரணைக்கு வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில் தன்னுடைய மகனின் மரணத்துக்கு அவரது காதலி ரியா தான் காரணம் என சுஷாந்தின் தந்தை புகாரளித்துள்ளார்.
இதுதொடர்பாகவும் விசாரணை நடந்து வரும் நிலையில் தன் மீது எந்தவொரு தவறுமில்லை என ரியா கூறிவருகிறார்.
இந்நிலையில் சுஷாந்த்தின் பிரேத பரிசோதனை அறிக்கையில் இறந்த நேரம் குறித்த தகவல்கள் எதுவும் இல்லை என அவரது குடும்ப வழக்கறிஞர் விகாஸ் சிங் குற்றஞ்சாட்டி இருக்கிறார்.
மேலும் இறப்பு நேரம் தெரிந்தால் கொலை செய்யப்பட்ட பின் தூக்கில் போடப்பட்டாரா? அல்லது தூக்குப் போட்டு இறந்தாரா? என்பது தெளிவாக தெரியவரும் எனவும் தெரிவித்துள்ளார்.