ஜப்பானிய கப்பல் ஒன்று மொரீஷியஸ் கடற்கரைப் பகுதியில் விபத்துக்குள்ளாகி இரண்டாக பிளவடைந்துள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
4000 தொன் எரிபொருளை ஏற்றிக் கொண்டு பயணித்த எம்.வி.வகாஷியோ என்ற ஜப்பானுக்கு சொந்தமான கப்பல் அண்மையில் பவளப்பாறையுடன் மோதி விபத்துக்குள்ளானது.
இதனால் நூற்றுக்கணக்கான தொன் எரிபொருட்கள் ஏலவே கடலில் கலந்துவிட்ட நிலையில், கப்பல் இரண்டாக பிளவடைந்துள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட புகைப்படங்கள் எம்.வி.வகாஷியோவை இரண்டு துண்டுகளாக பிளவடைந்துள்ளதை வெளிக்காட்டியுள்ள நிலையில்,
குறித்த பகுதியில் சுற்றுச்சூழல் அவசரநிலையை அறிவிக்கப்பட்டு மீதமுள்ள எண்ணெயை கப்பலில் இருந்து வெளியேற்றுவதற்காக மீட்புக் குழுவினர் போராடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.