Loading...
மஞ்சள் தூளுடன் பல்வேறு பொருட்கள் கலக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதனை ஆராய்ந்த அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில், மஞ்சள் தூளின் அரைவாசியில் கோதுமை மா மற்றும் அரிசி மா கலந்துள்ளமை தெரியவந்துள்ளது.
Loading...
மஞ்சள் கொள்வனவின் போது பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன்,
ஸ்ரீலங்காவில் மஞ்சளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாகவே மாவுடன் வர்ணங்களை கலந்து இவ்வாறு விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் விவகார அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
Loading...