ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 670 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை கொரோனா தொற்றினால் பீடிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 890 ஆக பதிவாகியுள்ளதாக அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிக்கை வெளியிட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நேற்றைய தினம் கொரோனா தொற்றினால் பீடிக்கப்பட்ட மேலும் நால்வர் அடையாளம் காணப்பட்டனர்.
ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் இருந்து நாடு திரும்பிய இருவரும் மாலைதீவில் இருந்து நாடு திரும்பிய ஒருவரும் துருக்கியில் இருந்த வருகைதந்த வெளிநாட்டவர் ஒருவரும் அடையாளம் காணப்பட்டனர்.
இன்று நான்கு பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ள நிலையில் – தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 670 ஆக உயர்வடைந்துள்ளது.
13 வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் 55 பேர் கொரோனா தொற்று கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
முப்படையினரால் நடத்திச் செல்லப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் வைக்கப்பட்டிருந்த 15 பேர் தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவுசெய்து வீடு திரும்பியுள்ளனர்.
இதுவரை 30 ஆயிரத்து 524 பேர் தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவுசெய்து வீடு திரும்பியுள்ளனர்.
42 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 4 ஆயிரத்து 756 பேர் தொடர்ந்தும் தங்கவைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.