Loading...
ரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசிகளின் வா்த்தகரீதியிலான உற்பத்தி தொடங்கப்பட்டுவிட்டதாக அந்த நாட்டின் ‘இன்டா்ஃபாக்ஸ்’ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, ரஷ்ய சுகாதாரத் துறை அமைச்சகத்தை மேற்கோள் காட்டி அந்த செய்தி நிறுவனம் கூறியுள்ளதாவது:
Loading...
ரஷ்யாவில் உருவாக்கப்பட்டு, சோதனைகளில் வெற்றிகரமாக செயல்பட்ட கொரோனா தடுப்பூசியை, பொதுமக்கள் பயன்பாட்டுக்காக பெருமளவில் உற்பத்தி செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுவிட்டன.
கமாலேயா ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு உலகிலேயே முதல் முறையாக அனுமதி வழங்கப்பட்டுள்ள அந்த தடுப்பூசி, இந்த மாத இறுதிக்குள் விற்பனைக்கு வரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா் என அந்தச் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
Loading...