பொதுத் தேர்தல் முடிவடைந்த நிலையில் எதிர்வரும் காலத்தில் நடைபெறவுள்ள எந்தவொரு தேர்தலிலும் போட்டியிட மாட்டேன் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கல கொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.
எனினும், ஏனைய அரசியல் இயக்கத்தில் ஈடு பட்டுள்ள எவருக்கும் சிங்கள பௌத்த தத்துவத்தை ஆதரிக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த முறை பாராளுமன்றத்தில் தனக்கு இடம் கிடைக்கவில்லை என்றாலும், எப்போதும் மக்களுக்காக உழைக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை எங்கள் மக்கள் சக்தி அமைப்புக்கு நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் தேசியப்பட்டியல் ஆசனமொன்று கிடைத்த நிலையில் அதற்கு அதுரலிய ரத்ன தேரர் மற்றும் ஞானசார தேரர் இடையே கடும் போட்டி இடம்பெற்று வந்ததை அடுத்து இதுவரை அந்த இடத்துக்கு எவரும் நியமிக்கப்படாமல் இழுபறியிலேயே உள்ளமை குறிப்பிடத்தக்கது.