யாராவது சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவித்தால், அந்தஸ்து அல்லது அரசியல் செல்வாக்கைப் பொருட்படுத்தாமல் சட்டம் கண்டிப்பாக அமல்படுத்தப்படும் என சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
சூரியவெவவில் நடந்த பொதுக் கூட்டத்திற்குப் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
‘என்னிடம் இருந்த அதே பொறுப்பை நான் மீளவும் பெற விரும்பவில்லை. எனக்கு அத்தகைய நம்பிக்கை இல்லை.
இந்த முறை நான் சுற்றுச்சூழல் அமைச்சகத்தைப் பெற்றுள்ளேன். எனவே சுற்றுச்சூழல் அமைச்சகம் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான தனது பொறுப்பை சில காலமாக செய்து வருவதை விட வேறு வழியில் நிறைவேற்றும் என்பது எனது நம்பிக்கை.
நாட்டின் வளர்ச்சிக்கு என்னால் முடிந்ததைச் செய்வேன். சுற்றுச்சூழல் அமைச்சராக, திருகோணமலையில் உள்ள சம்பால்தீவில் சட்டவிரோத கட்டுமானங்கள் தொடர்பான பிரச்சினையில் நான் தலையிடுகிறேன். நான் நிச்சயமாக இந்த சிக்கலை கவனிப்பேன்.
இலங்கையில் ஒரே ஒரு சட்டம் மட்டுமே உள்ளது. இது யாழ்ப்பாணம், திருகோணமலை அல்லது வேறு எந்த மாவட்டத்தில் இருந்தாலும் அதை மாற்ற முடியாது. எந்தவொரு பிரதேசமும் தனக்கென விதிகளை உருவாக்க அனுமதிக்க மாட்டோம்.
எனவே, அது யாராக இருந்தாலும், சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் ஏதாவது நடந்தால், நான் அந்தஸ்து அல்லது அரசியல் அதிகாரத்தைப் பற்றி கவலைப்படுவதில்லை. அவர்களுக்கு எதிரான சட்டத்தை நான் கண்டிப்பாக அமுல்படுத்துவேன். இது குறித்து எனக்கு இதுவரை முறையான புகார் கிடைக்கவில்லை. ஆனால் இது குறித்து நான் நடவடிக்கை எடுப்பேன் ‘