அவுஸ்திரேலியாவில் 14 வயது பள்ளி மாணவனை பூங்காவிற்கு அழைத்துச் சென்று அவருடன் நெருக்கமாக இருந்ததாக 23 ஆசியர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலிவின் சிட்னியை சேர்ந்த Monica Elizabeth Young என்ற 23 வயது ஆசிரியர், 14 வயது பள்ளி சிறுவனுடன் பல முறை நெருக்கமாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குறிப்பாக அந்த சிறுவனுடன் காரில் பூங்காவிற்கு செல்லும் சிசிடிவி காட்கள் புலனாய்வாளர்களுக்கு கிடைத்துள்ளது. ஆனால் உள்ளே என்ன நடந்தது என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை.
ஆனால் பிரபல ஆங்கில ஊடகமான டெய்லி மெய்ல் ஆன்லைன், சிறுவனை பூங்காவிற்கு அழைத்து சென்று அவருடன் நெருக்கமாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளது.
நிச்சயதார்த்தம் செய்யப்பட்டுள்ள Monica Elizabeth Young, மாணவனுடன் காரில் நெருக்கமாக இருந்ததை, சவுத் வேல்ஸில் இருக்கும் நிதிமன்ற விசாரணையின் போது மறுத்துள்ளார்.
அதுமட்டுமின்றி மற்றொரு சந்தர்ப்பத்தின் போது, வகுப்பறையில் மாணவனை தனது தொடையில் கையை வைத்து, மோசமாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து ஸ்னாப் சாட்டில் நான் அவருக்காக காத்திருப்பதாக கூறி குறுந்தகவலையும் அனுப்பியுள்ளார்.
இதன் காரணமாக நீதிமன்ற விசாரணையின் போது இவர் குழந்தைகளை குறி வைப்பவர், வெளியில் விட்டால் ஆபத்து என்று வாதிடப்பட்டது. இருப்பினும் தொடர் விசாரணைக்கு பின்னர் ஆசிரியருக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஜுலை மாதம் இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இவர், சுமார் ஒரு மாத காலம் சிறையில் கழித்த நிலையில், தற்போது ஜாமீனில் வெளி வந்துள்ளார். இது தொடர்பான வழக்கு விசாரணை அடுத்த மாதம் 2-ஆம் திகதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.
மேலும், இந்த சம்பவத்தில் Monica Elizabeth Young 14 வயது இரண்டு முறை உடல் அளவில் நெருக்கமாக இருந்ததாகவும், அவரை பாலியல் ரீதியாக தொட்டதாகவும் பொலிசார் கூறுகின்றனர்.
இதையடுத்து ஒரு குழந்தைக்கு எதிராக ஒரு பாலியல் செயலைச் செய்ததாகவும், அதை அவளிடம் செய்ய தூண்டியதாகவும் யங் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டுகளில் வெளிப்படையான ஸ்னாப்சாட் வீடியோவை ஆசிரியை அனுப்பியதாகவும், அதற்கு பதிலாக ஒன்றைக் கேட்பதாகவும் கூறப்படுகிறது.
அதன் பின்னரே கடந்த ஜுலை மாதம் 10-ஆம் திகதி வீட்டில் இருந்த Monica Elizabeth Young கைது செய்யப்பட்டார். ஆனால் விசாரணையின் போது ஆசிரியர் இந்த குற்றச்சாட்டுகளை மறுக்கிறார். இது தொடர்பாக நடத்தப்பட்ட உள்ளூர் நீதிமன்ற விசாரணையின் போது அவர் ஜாமீன் மறுக்கப்பட்டது.