பிரித்தானியாவில் கடற்கரையில் காணமல் போன இரண்டு சகோதரர்கள் பல மணி நேர தேடுதலுக்கு பின் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
பிரித்தானியாவின் West Yorkshire-ன் Dewsbury பகுதியை சேர்ந்த Muhammad Azhar Shabbir(18) மற்றும் Ali Athar Shabbir(16) ஆகியோர், நேற்று மாலை Lancashire-ல் இருக்கும் Lytham St Annes கடற்கரைக்கு சென்றுள்ளனர்.
இவர்கள் குடும்பத்தினருடன் சென்றதாக கூறப்படுகிறது. ஆனால் அது உறுதிபடுத்தப்படவில்லை.
இந்நிலையில் இவர்கள் அங்கிருக்கும் தண்ணீருக்குள் இறங்கிய பின், காணமல் போயுள்ளனர். இதனால் மீட்பு படையினர் நேற்று இரவு மற்றும் இன்று என தொடர்ந்து பல மணி நேரம் தேடி வந்தனர்.
ஆனால் உடல்கள் கிடைக்காததால் சிறிது நேரம் தேடும் பணி நிறுத்தப்பட்டு, அதன் பின் மீண்டும் தேடும் படி துவங்கியது.
இதையடுத்து, இன்று பிற்பகல் உள்ளூர் நேரப்படி 3.15 மணிக்கு இரண்டு பேரின் சடலங்கள் காணமல் போன தொலைவில் இருந்து சுமார் 1 மைல் தொலைவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து Lancashire பொலிசார் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், கண்டுபிடிக்கப்பட்ட சடலங்கள் இன்னும் முறையாக அடையாளம் காணப்படவில்லை.
இருப்பினும், அவர்கள் Muhammad Azhar Shabbir(18) மற்றும் Ali Athar Shabbir(16) என்று நம்பப்படுகிறது.
இது குறித்து அவர்களது குடும்பத்தினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சடலத்தை கண்டுபிடிப்பதற்கு பல மணி நேரங்கள் போராடிய வீரர்களுக்கும், அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்து கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.