நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான வரவிருக்கும் 2021 சட்டசபை தேர்தலில் போட்டியிட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அதிமுக, திமுக கட்சியை தொடர்ந்து சமீபத்திய தேர்தல்களில் நாம் தமிழர் கட்சி ஒரு வலுவான கட்சியாக மாறி வருகிறது.
முன்பு இருந்ததை விட அதிக வாக்குவங்கிகளையும் பெற்று வருகிறது. இதனால் நிச்சயமாக வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் நாம் தமிழர் கட்சி ஒரு முக்கியமான கட்சியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சென்னையில் புதிய கல்வி கொள்கைக்கு எதிராக நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறை சார்பாக போராட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்தில் சீமானும் கலந்து கொண்டார்.
அப்போது அவர், அந்தி வந்தால் நிலவு வரும். அதேபோல் இந்தி வந்தால் பிளவு வந்தே தீரும். இப்போது இந்தியை இந்திய கூட்டாட்சி அமைப்புக்குள் திணிக்கவே முயற்சிக்கிறார்கள். இது நிச்சயம் பேராபத்தானது.
இன்று இந்தி மொழியை படிக்க வேண்டும் என்கிறார்களே, நாடு முழுவதும் தமிழ் மொழியையும் படிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிப்பார்களா? 2021 சட்டசபை தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டியிடும்.
நானும் 2021 சட்டசபை தேர்தலில் போட்டியிடுவேன் என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.