சில நேரங்களில், நாம் உட்கொள்ளும் பொதுவான உணவுப் பொருட்கள் ஆரோக்கியத்திற்கு கடுமையான ஆபத்தை ஏற்படுத்தும்.
காய்கறிகள், கீரைகள் ஆகியவை உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கின்றன என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று.
ஒரு சில உணவுப்பொருட்கள் மட்டும் சமைக்கும்போது மிகவும் கவனமாக சமைக்க வேண்டும். பொதுவாக இறைச்சி உணவுகளை நன்றாக வேகவைத்து சமைக்க வேண்டும். அதைதவிர இன்னும் சில உணவுப்பொருட்களை சரியான வெப்பநிலையில் சமைக்க வேண்டும்.
உணவை உட்கொள்வதற்கு முன்பு ஒரு குறிப்பிட்ட வழியில் நடத்தப்படுவதற்கு ஒரு காரணம் இருக்கிறது.
ஒழுங்காக சமைக்கப்படாவிட்டால், பல உணவுப் பொருட்கள் ஏராளமான உடல்நலப் பிரச்சினைகளையும், பக்க விளைவுகளையும் உயிருக்கு ஆபத்தான விளைவைக்கூட ஏற்படுத்தும்.
முட்டைகளை அப்படியே பச்சையாக உட்கொள்வது மிகவும் பொதுவானது. கேக்-க்ரீமில் மூல முட்டையின் வெள்ளைக்கருவைப் பயன்படுத்துவது முதல் மயோனைசேவில் பயன்படுத்துவது வரை பச்சை முட்டையை சாப்பிடுவது பொதுவானது. சிலர் அரை சமைத்த முட்டையின் சுவை கூட விரும்புகிறார்கள்.
ஆனால் மூல முட்டைகளை உட்கொள்வது பாதுகாப்பானதா? முட்டையில் பாக்டீரியா (சால்மோனெல்லா) இருக்கலாம்.
இது வயிற்று பிரச்சனையை உருவாக்கும். சில நேரங்களில் இது காய்ச்சல் வைரஸைக் கூட ஏற்படுத்தக்கூடும். எனவே சாப்பிடுவதற்கு முன்பு முட்டைகளை நன்றாக வேகவைத்து சமைக்க வேண்டியது அவசியம்.