போதைக்கு அடிமையாகி சைக்கோவான மனிதரை விசாகப்பட்டினத்தில் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
விசாகபட்டினம் மாவட்டத்தில் போதைக்கு அடிமையான 20 வயதான ரவேலபுடி ராஜு என்ற இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞர் கடந்த புதன்கிழமை ரயில் நிலையத்தின் ஆள் நடமாட்டம் இல்லாத ஒதுக்குப்புறத்தில் கையில் கிடைப்பதையெல்லாம் தின்று கொண்டிருந்துள்ளார்.
இதை கவனித்த உள்ளூர் மக்கள் பயந்து காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். அது மாத்திரம் இன்று குறித்த இளைஞருடன் பெண் ஒருவரும் இருந்ததாக கூறப்படுகிறது. அவரை கைது செய்த போலீசார் அது யார் என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ராஜுவை நெருங்கும் போது அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளார்.
இந்நிலையில் போலீசார் தேடிவந்த சைக்கோ ராஜுவை பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் ராஜுவை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்து ஆட்டோவில் ஏற்றி காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் பீதியில் ஆழ்த்தியுள்ளது.