Loading...
மூணாறு நிலச்சரிவில் மேலும் 3 உடல்கள் மீட்பு, நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது.
கேரளாவில் கனமழை காரணமாக மூணாறு, ராஜமலை எஸ்டேட் பகுதியில் கடந்த 7ம் தேதி பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் 20க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணில் புதைந்தது. அங்கு தேயிலை தோட்டப் பணிகளில் ஈடுபட்டு வந்த பலர் நிலச்சரிவில் சிக்கி புதையுண்டனர். அவர்களை மீட்கும் பணிகள் 12வது நாளாக தொடர்ந்து நடை பெற்று வருகிறது.
Loading...
இதுவரை 58 உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் இன்று மேலும் 3 உடல்கள் ஆற்றில் இருந்து மீட்கப்பட்டது. இதன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை11 பேர் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Loading...