Loading...
குழந்தைகள் பிறந்தது முதல் அவர்கள் வாலிப பருவத்தை அடையும் வரை என்னென்ன பழக்கவழங்களை பெற்றோர் கற்றுத்தர வேண்டும் என்பதை பிரபல உளவியல் மருத்துவர் ஒருவர் விரிவாக தெரிவித்துள்ளார்.
Loading...
பிரித்தானிய நாட்டை சேர்ந்த Carl Pickhardt என்பவர் உளவியல் மருத்துவர் மட்டுமின்றி குழந்தைகளை வளர்க்கும் முறையை பற்றி 15 புத்தகங்களை எழுதிய பிரபல எழுத்தாளரும் ஆவார். குழந்தைகளை சமூகம் போற்றும் திறமைசாலிகளாக வளர்க்க உதவும் 18 எளிய வழிமுறைகளை அவர் தனது புத்தகங்களில் விளக்கியுள்ளார்.
- குழந்தைகள் ஒரு செயலில் ஈடுப்பட்டு அதில் வெற்றி அல்லது தோல்வி அடைந்தால் கூட அவர்களை பெற்றோர் வெகுவாக பாராட்ட வேண்டும்.
- குழந்தைகளிடம் உள்ள ஆற்றலை வெளியில் கொண்டுவர அவர்களை தொடர்ந்து ஊக்கப்படுத்த வேண்டும்.
- குழந்தைகள் மத்தியில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால், அதற்கான தீர்வை அவர்களே ஏற்படுத்த பழக்க வேண்டும்.
- ஒரு குழந்தைக்கு 5 வயது என்றால், அந்த வயதுக்கு தேவையான விடயங்களை மட்டுமே கற்றுக்கொடுக்க வேண்டும். வயதிற்கு மீறிய பழக்க வழக்கங்களை கற்றுத்தரக் கூடாது.
- குழந்தைகளுக்கு புதிதாக எதையாவது தெரிந்துக்கொள்ளும் ஆர்வம் மிகுதியாக இருக்கும். இந்த ஆர்வத்தை பெற்றோர்கள் ஊக்கப்படுத்த வேண்டும்
- குழந்தைகள் வளர வளர அவர்களுக்கு புதிய சவால்களை வழங்கி அவர்களின் திறனை பரிசோதனை செய்ய வேண்டும்.
- ஒரு திட்டத்தை செயல்படுத்த எளிமையான குறுக்கு வழிகளை குழந்தைகளுக்கு கற்றுத்தரக் கூடாது.
- குழந்தைகள் எக்காரியத்தில் ஈடுப்பட்டாலும் அவற்றை மோசமாக விமர்சனம் செய்யக்கூடாது
- குழந்தைகள் தவறு செய்தால் ‘இது கற்பதற்கான முதல் படி’ என அவர்களுக்கு தைரியம் கொடுக்க வேண்டும்.
- புது புது அனுபவங்களை குழந்தைகளுக்கு வழங்கி அவர்களின் சிந்திக்கும் திறனை பெற்றோர்கள் அதிகப்படுத்த வேண்டும்.
- ஒரு விடயத்தில் நீங்கள் திறமைசாலிகளாக இருந்து, அதை எப்படி செய்ய வேண்டும் என உங்களுக்கு முழுமையாக தெரிந்தால் அவற்றை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்கலாம்.
- ஏதாவது ஒரு விடயத்தில் குழந்தைகளின் எதிர்காலம் மீது உங்களுக்கு கவலை ஏற்பட்டால் அதை அவர்களிடம் நிச்சயமாக காட்டிக்கொள்ளக் கூடாது.
- குழந்தைக்கு துன்பம் ஏற்பட்டு அதில் இருந்து மீள முயற்சி செய்யும்போது அவற்றை பெற்றோர் வெகுவாக பாராட்ட வேண்டும்
- குழந்தைகளுக்கு உதவியும் ஆதரவும் தர வேண்டும். ஆனால், இதை ஒரு எல்லைக்கு மேல் செய்யக்கூடாது.
- சவால் நிறைந்த ஒரு புதிய விடயத்தை அவர்களும் செய்யும்போது அவர்களிடன் தைரியத்தை பெற்றோர் பாராட்ட வேண்டும்.
- குழந்தைகளுக்கு கற்கும் ஆர்வம் அதிகமாக இருந்தால், அவற்றை கொண்டாடி அவர்களை பாராட்ட வேண்டும்.
- இணையத்தளங்களில் அதிக நேரங்களை செலவிட அனுமதிக்க கூடாது. நம்மை சுற்றியுள்ள உண்மையான சமூகத்தை அவர்கள் நேரடியாக பார்க்க அனுமதிக்க வேண்டும்.
- குழந்தைகளின் பெற்றோர் என்றளவில் அவர்கள் மீது கட்டுப்பாடாக இருங்கள். ஆனால், இதையே அதிகாரம் செலுத்துவது போல் மாற்றிவிடக்கூடாது.
Loading...