அனுராதபுரம் பகுதியில் போலி நாணயத் தாள்களை வைத்துக்கொண்டு மின்சாரக் கட்டணம் செலுத்த முயற்சித்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அனுராதபுரம் நகர் பகுதியில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் வைத்தே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
போலியான ஐந்து 1000 ரூபா நாணத்தாள்களை வைத்து, மின்சார கட்டணம் செலுத்த குறித்த நபர் முயற்சித்துள்ளார்.
சூப்பர் மார்க்கெட் காசாளருக்கு குறித்த நாணயத்தாள்களின் மீது ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில்,குறித்த காசாளர் அனுராதபுரம் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.
குறித்த இடத்திற்கு வருகை தந்து சோதனைகளை மேற்கொண்ட பொலிஸார் இவை போலி நாணயத்தாள்களே என தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபரிடம் இருந்து ஏனைய ஐந்து 5000 ருபா நாணயத்தாள்களும், ஒரு 1000 ருபா நாணயத்தாளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த சந்தேகநபர் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளார்.