ஹட்டன் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஹட்டன், பொகவந்தலாவ பிரதான வீதியின் காசல்ரீ நீர்தேக்கத்திற்கு நீர் ஏந்தி செல்லும் டிக்கோயா கிளை ஆற்றில் உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் இன்று (21) பிற்பகல் 2 மணி அளவில் இடம்பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
டிக்கோயா ஆற்றுக்கு குப்பை கொட்ட சென்ற இளைஞன் ஒருவரினால் குறித்த சடலம் இனங்காணப்பட்டதை அடுத்து, ஹட்டன் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரனைகளை ஆரம்பித்துள்ளனர்.
சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. சடலமாக மீட்கப்பட்ட நபர் 35 வயது மதிக்கதக்கவர் எனவும் பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் ஹட்டன் நீதவான் தலைமையில் மரண விசாரணைகள் இடம்பெற்றதுடன் சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக சடலம் டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லபட உள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.