அண்மைக்காலமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்பில் வெளியான ஜோதிட கணிப்பு ஒன்று அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது.
அடுத்து வரும் சில மாதங்களில் ஆபத்தான கட்டத்தை ஜனாதிபதி மைத்திரி எதிர்நோக்கவுள்ளதாக ஜோதிடர் ஒருவர் ஆருடம் தெரிவித்திருந்தார்.
இந்த ஜோதிட கணிப்பு தொடர்பில் ஊடகங்களில் வெளியாகும் கருத்துகளால் ஜனாதிபதி குழப்படைந்துள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் விளக்கம் பெற்றுக்கொள்ளும் சந்திப்பொன்று ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது பல்வேறு ஜோதிடர்களினால் ஜனாதிபதி தொடர்பில் வெளியிட்டுள்ள ஆரூடங்கள் தொடர்பில் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதிக்கு நெருக்கமான ஜோதிட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பிக்கு ஒருவரின் கருத்து மைத்திரியை மேலும் குழப்படைய வைத்துள்ளது.
எதிர்வரும் ஜனவரி மாதத்தில் ஜனாதிபதிக்கு தோஷங்களுடனான மாதம் அமைந்துள்ளாக குறித்த பிக்கு ஆரூடம் வெளியிட்டுள்ளமையே இந்த குழப்பத்திற்கு பிரதான காரணமாகும்.
ஜோதிடரின் ஆலோசனைக்கமைய ஜனவரி முதல் வாரத்தில் நாட்டில் பல பூஜை வழிப்பாடுகளை நடத்துமாறு, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அனைத்து மக்கள் பிரதிநிதிகளுக்கும் இரகசிய தகவல் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.