இயற்கையான முறையில் தலை முடி உதிர்வு பிரச்சனையை தடுப்பதற்கு சூப்பரான வழிகள் உள்ளது.
நாம் அன்றாடம் பயன்படுத்தி வரும் ஷாம்புடன் சில மருத்துவ குணம் நிறைந்த பொருட்களையும் சேர்த்து பயன்படுத்தி வந்தால், விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.
முட்டை
முடி உதிர்வை தடுக்கும் விட்டமின்கள், தாதுக்கள், கொழுப்பு அமிலங்கள் போன்ற சத்துக்கள் முட்டையில், அதிகமாக நிறைந்துள்ளது.
முட்டையானது, முடி நன்றாக வளர்வதற்கு, அதிக ஊட்டமளிக்கிறது. எனவே நாம் பயன்படுத்தும் ஷாம்புடன் 3 முட்டைகள், ஆலிவ் ஆயில் மற்றும் சிறிது எலுமிச்சை சாறு கலந்து தலைக்கு நன்றாக தேய்த்துக் குளித்து வந்தால், தலைமுடி மிருதுவாக, நன்றாக வளரும்.
பேக்கிங் சோடா
ஒரு டீஸ்பூன் பேக்கிங் சோடாவை நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஷாம்புடன் கலந்து, தினமும் தலைக்கு தேய்த்து குளித்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.
எலுமிச்சை பழம்
அரை டீஸ்பூன் எலுமிச்சை பழத்தின் சாறு, 2 டேபிள் ஸ்பூன் ஷாம்பு தேவைப்பட்டால் ரோஸ்மெரி ஆயில் ஆகியவற்றை ஒன்றாக கலந்து தலைமுடியின் மீது நன்றாக தேய்த்து குளிக்க வேண்டும்.
தேன்
இரண்டு டேபிள் ஸ்பூன் ஷாம்புடன், அரை டீஸ்பூன் தேன் கலந்து, தினமும் தலைக்கு குளிக்கும் போது, பயன்படுத்தி வந்தால், உங்களின் தலைமுடி மிகவும் மிருதுவாகவும், உதிராமலும் இருக்கும்.
கற்றாழை
கற்றாழை நமது உடல் ஆரோக்கியத்திற்கும், அழகிற்கும் மிகவும் ஏற்ற மருத்துவகுணம் நிறைந்த பொருளாகும். எனவே இரண்டு டேபிள்ஸ்பூன் ஷாம்புடன், சிறிதளவு கற்றாழை செல்லை சேர்த்து கலந்து தினமும் தலைக்கு குளிக்க வேண்டும்.
ரோஸ்வாட்டர்
ரோஸ் வாட்டர் நமது சருமம் மற்றும் முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. எனவே ஒரு டீஸ்பூன் ரோஸ் வாட்டருடன், இரண்டு டீஸ்பூன் ஷாம்பு சேர்த்துக் கலந்து, தினமும் தலைக்கு தேய்த்துக் குளித்து வர வேண்டும்.