சூரிய குளியல் உடல் நலத்துக்கு நல்லது என்ற பொதுவான கருத்து நிலவுகிறது. இதனால் மேலை நாடுகளில் கடற்கரையில் பொதுமக்கள் சூரிய குளியலில் ஈடுபடுகின்றனர்.
இத்தகைய சூரிய குளியலால் நீரிழிவு மற்றும் இருதய நோய்கள் வராமல் தடுக்கப்படும் என்ற புதிய தகவல் ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.
உணவுப்பொருட்களில் உள்ள அதிக அளவிலான கொழுப்பினால் வளர்சிதை நோய் ஏற்படுகிறது. உடலில் வைட்டமின் டி குறைபாடினால் அத்தகைய நோய் உருவாகிறது என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இத்தகைய வளர்சிதை நோயினால் நீரிழிவு மற்றும் இருதய நோய்கள் ஏற்படுகின்றன. எனவே இவற்றுக்கு மூலகாரணமாக விளங்கும் வைட்டமின் டி சூரிய ஒளியில் அதிக அளவில் உள்ளது.
எனவே சூரிய குளியல் செய்வதன் மூலம் வைட்டமின் டி அதிகரிக்க செய்து மேற்கண்ட நோய்கள் வராமல் தடுக்க முடியும். இந்த ஆய்வை அமெரிக்காவை சேர்ந்த நிபுணர் ஸ்டீபன் பண் போல் குழுவினர் செய்துள்ளனர்.