இந்திய அணியில் இருந்து சர்வதேச போட்டிகளில் ஓய்வு பெற்றுள்ள டோனி, குறித்து பத்திரிக்கையாளர் சில முக்கியமான விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
இந்திய அணியின் வெற்றிக் கேப்டன், சிறந்த பினிஷர் என்றெல்லாம் அழைக்கப்ப்ட்ட டோனி கடந்த 15-ஆம் திகதி சுதந்திர தினத்தன்று சர்வதே போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
அதன் பின் டோனி குறித்து பல விஷயங்களை சிலர் நேரடியாகவும், ஒரு சிலர் சமூகவலைத்தளங்களிம் பதிவிட்டு வருகின்றனர்.
அந்த வகையில், டோனி குறித்து பத்திரிக்கையாளர் ஒருவர் சமூகவலைத்தள பதிவில், ஒரு எட்டு வருடங்கள் இருக்கும். தோனியும் அவர்கள் மனைவி அவரது நண்பர் ஒருவரின் வீட்டிற்கு இரவு உணவிற்காக அழைக்கப்பட்டு இருந்தார்கள்.
நானும் அங்கு அழைக்கப்பட்டிருந்தேன். அங்குதான் டோனியை நான் முதன் முதலில் சந்தித்தேன். மிகவும் இயல்பாகவும் அன்பாக பேசினார்.
எப்போதும் தனது முகத்தில் சிரிப்பை வைத்திருந்தார். எங்களது உரையாடல்கள் ராணுவம், கிரிக்கெ,ட் பைக்குகள் என்று தொடர்ந்து கொண்டே சென்றது.
இறுதியில் நாய்களுடன் முடிந்தது நான் எப்போதும் நாய்களுடன் இருக்கும்போதுதான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் அவைகளோடு இருக்கும்போது நேரம் போவதே தெரியாது என்று என்னிடம் கூறினார் தோனி இவ்வாறு தெரிவித்துள்ளார் அந்த பத்திரிகையாளர்.