இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முச்சதம் அடித்த கருண் நாயர் குறைப்பிரசவத்தில் பிறந்தவர் என அவரது தாய் தெரிவித்துள்ளார்.
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான ஜந்தாவது மற்று கடைசி டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி அபார வெற்றி பெற்று 4-0 என்ற கணக்கில் கிண்ணத்தை வென்று சாதனை படைத்தது.
இதில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 759 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இந்திய அணியின் இந்த இமாலய இலக்கிற்கு, முக்கிய காரணமே கருண்நாயர் தான். இவர் தன்னுடைய மூன்றாவது இன்னிங்ஸிலே முச்சதம் அடித்து சாதனை படைத்தார்.
சாதனை படைத்த கருண் நாயர் தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில் கருண்நாயர் குறித்து அவரது தாயார் உருக்கமான பேட்டி அளித்துள்ளார்.
அவர் கூறுகையில், கருண்நயார் குறை பிரசவத்திலே பிறந்து விட்டதால், தாங்கள் மிகுந்த வருத்ததில் இருந்தோம்.
அப்போது மருத்துவர்கள் தான், இது போன்ற குழந்தைகள் தனித் திறமையுடன் வளர்வார்கள் என்றும், அதனால் வருத்தப்பட ஒன்றுமில்லை எனவும் சந்தோஷமாக இருங்கள் என்று தைரியமூட்டியதாக கூறியுள்ளார்.
மருத்துவர்கள் இவ்வாறு கூறிய பின்பு நானும் என் கணவரும் எப்போதும் அவனை கண்காணித்துக் கொண்டேதான் இருந்தோம்.
அதன் பின்னர் அவன் கிரிக்கெட் விளையாடுவதில் அதிக ஆர்வம் காட்டினான், அவன் விருப்பப்படி விட்டு விட்டோம்.
எப்போது பார்த்தாலும் மட்டையும் கையுமாகத்தான் இருப்பான், இப்போது அவனை பெற்றதற்கான பலனை அடைந்து விட்டேன் என்று தெரிவித்துள்ளார்.