பார்லர்களில் முடிந்தவரை பிளீச் செய்வதை தவிருங்கள். அதற்கு மாற்றாக நீங்கள் வீட்டிலேயே பிளீச் செய்து கொள்ளலாம். சிறிதும் பக்க விளைகளின்றி, சருமத்திற்கு ஊட்டம் தந்து கருமையை போக்கிடும். அப்படி அட்டகாசமான குறிப்புகளைதான் இப்போது பார்க்கப் போகிறோம்.
உருளைக்கிழங்கு பிளீச் பேக் :
உருளைக் கிழங்கு
ரோஸ்வாட்டர்
தேன்(அ) எலுமிச்சை சாறு
உருளைக் கிழங்கின் தோலை சீவிக் கொள்ளுங்கள். அதனுடன் சிறிது ரோஸ் வாட்டர் கலந்து பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ளவும். உங்களுக்கு வறண்ட சருமம் இருந்தால் தேன் சேர்த்து கலக்குங்கள். எண்ணெய் சருமமாக இருந்தால் எலுமிச்சை சாறு கலக்கவும். இதனை முகம், கழுத்துப் பகுதியில் தடவவும். 20 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள். பளிச்சென்ற முகத்தை காண்பீர்கள்.
தக்காளி பிளீச் பேக் :
தக்காளி
தயிர்
தக்காளியின் விதையில்லாமல் அரைத்துக் கொள்ளுங்கள். அதனுடன் சிறிது தயிர் கலந்து முகத்தில் போடவும். 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவுங்கள். முகம் ஜொலிப்பதை உணருங்கள்.
வெள்ளரி பிளீச் பேக் :
வெள்ளரிக்காய்
சோற்றுக் கற்றாழை
வெள்ளரிக்காய் சாறு எடுத்து அதனுடன் கற்றாழை ஜெல்லை கலந்து முகத்திலும் கழுத்திலும் தடவுங்கள். காய்ந்ததும் கழுவினால் முகத்தில் உடனடியாக கருமை மறைந்திருப்பதை பார்க்கலாம்.
எலுமிச்சை பிளீச் பேக் :
எலுமிச்சை சாறு
கிளிசரின்
தேன்
எலுமிச்சை சாற்றில் சிறிது கிளிசரின் அல்லது தயிர் மற்றும் தேன் கலந்து முகத்தில் தடவுங்கள். 20 நிமிடங்களில் முகத்தை கழுவுங்கள். முகம் பொலிவாக இருக்கும்.