இஸ்ரேலில் 1,000 ஆண்டுகள் பழமையான தங்க நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலை சேர்ந்த இளைஞர்கள் சிலர் களிமண் பானை ஒன்றை கண்டுபிடித்தனர். அதில் ஏராளமான தங்க நாணயங்கள் இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர். இவை அனைத்தும் 1,100 ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்டதாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதனை புதைத்த நபர், மீண்டும் எடுக்கும் நோக்கத்தில்தான் புதைத்திருக்க வேண்டும் என கூறியுள்ளனர். ஏனென்றால் அது மிகவும் பாதுகாப்பான முறையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். ஆனால் இந்த புதையலை புதைத்து வைத்தவர் யார்? எந்த காரணத்தால் அவரால் இதனை மீண்டும் எடுக்க முடியவில்லை என தெரியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த புதையலை கண்டுபிடித்த இளைஞர் இதுபற்றி கூறுகையில், ‘நிலத்தில் தோண்டும் போது மெல்லிய இழை போல் ஏதோ ஒன்று தெரிந்தது. அதனை நன்றாக தோண்டி பார்க்கும் போது தங்க நாணயங்கள் இருப்பதை கண்டறிந்தேன். இதுபோன்ற பழமையான புதையலை கண்டுபிடித்ததற்கு மகிழ்ச்சியடைகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.
ஒன்பதாம் நூற்றாண்டுக்கு முந்தைய காலத்தில் 24 கேரட் தூய தங்க நாணயங்கள் அதிக செல்வாக்கு வாய்ந்தவர்களிடம் இருந்திருக்க கூடும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.