Loading...
குஜராத் மாநிலத்தில் கனமழைக்கு இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள பெரும்பாலான அணைகள் நிரம்பியுள்ள நிலையில், அணையை ஒட்டியுள்ள குடியிருப்புப் பகுதிகளில் தண்ணீர் புகுந்தது. இதனால் வீடுகளை விட்டு ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். பல்வேறு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் சாலைகள் துண்டிக்கப்பட்டு உள்ளதால், அருகில் உள்ள கிராமங்களுக்கு செல்லும் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளன.
Loading...
வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இதுவரை கனமழைக்கு 9 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...