ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் தொடர்பு கொண்ட சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபர் இலங்கைளில் மதம் சார்ந்த பயிற்சிகளில் பங்கேற்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டைம்ஸ் ஒப் இந்தியா குறித்த செய்தினை வெளியிட்டுள்ளது.
அபிட் கான் என்ற 23 வயதான பெங்களூரைச் சேர்ந்த குறித்த நபர் ஹிமாச்சல் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
சிரியாவுக்கு செல்லும் நோக்கில் அவர் இலங்கைக்கு பயணித்திருந்ததாக அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளது.
அவர் இலங்கையில் மதம் சார்ந்த பயிற்சிகளில் பங்கேற்றிருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்தியாவில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் ஆதரவாளர்கள் சிரியா செல்வதற்கு இலங்கையை பயன்படுத்துவதாக இந்தியாவின் தேசிய புலனாய்வு அமைப்பு தகவல்கள் வெளியிட்டுள்ளன.
எனினும், இலங்கையின் பாதுகாப்பு தரப்பினரால் இது உறுதிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது