ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான இலங்கையின் பொருளாதார, சமூக, அரசியல் துறைகளில் அடைந்துள்ள முன்னேற்றத்திற்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் பான் கீ மூன் பாராட்டியுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு பான் கீ மூன் நேற்று தொலைபேசி மூலம் அழைப்பை ஏற்படுத்தி குறித்த பாராட்டுக்களை தெரிவித்துள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.
குறித்த உரையாடலில், நல்லிணக்க செயற்பாடுகளுக்கான இலங்கையின் அர்ப்பணிப்பு உண்மையிலேயே பாராட்டுக்குரியது என்று கூறியுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இலங்கைக்கு மேலும் வெற்றிகள் கிட்டும் என்று பான் கீ மூன் கூறியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன் பதவியில் இருந்து சென்றாலும் இலங்கையின் அனைத்து எதிர்கால நடவடிக்கைகளுக்கும் தனது ஒத்துழைப்பை வழங்குவதாக கூறியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளராக பான் கீமூன் இலங்கைக்கு தொடர்ந்து வழங்கிய ஒத்துழைப்புக்களுக்கு ஜனாதிபதி இதன்போது நன்றி தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.