தேசிய மின் கட்டமைப்பில் ஏற்பட்ட திடீர் துண்டிப்பிற்கு அதிகாரி ஒருவரின் தவறே காரணம் என அது தொடர்பில் விசாரணை செய்த குழுவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த 17ஆம் திகதி 12:30 மணிக்கு தேசிய மின் கட்டமைப்பில் ஏற்பட்ட திடீர் துண்டிப்பு ஏற்பட்டிருந்தது.
இதன் போது மின் வினியோகத்தை முழுமையாக வழமைக்கு கொண்டு வருவதற்கு 8 மணிநேரம் சென்றதுடன் பின்னர் தற்காலிக கால அட்டவணையின் அடிப்படையில் மின் துண்டிப்பை அமுல்படுத்த இலங்கை மின்சார சபை தீர்மானித்திருந்தது.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை மின்வலு அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டதுடன் அது நேற்று மாலை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின்போது முன்வைக்கப்பட்டது
நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தை போன்று மற்றும் ஒரு மின் உற்பத்தி நிலையத்தை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை மின்வலு அமைச்சர் டலஸ் அழகப்பெரும இதன்போது தெரிவித்திருந்தார்.