தமிழக அரசு தற்போது தொடர் ரெய்டு நடவடிக்கையால் மிரண்டு போய் கிடக்கிறது! முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகன் ராவ் தொடங்கி நாகராஜன் ஐஏஎஸ் வரை நடந்த ரெய்டில் பல விடயங்கள் சிக்கியது.
அடுத்து தமிழக அமைச்சர்கள் வீட்டில் தான் ரெய்டு என கூறப்பட்டு வரும் நிலையில், தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து விட்டு வந்த பிறகு தான் இந்த ரெய்டுகள் ஆரம்பமானது என்பது முக்கிய விடயமாகும்.
பிரதமரிடம் தமிழக தேவை குறித்து பேசிய ஓ.பன்னீர் செல்வம், மன்னார்குடி தரப்பு தனது ஆட்சி அதிகாரத்தில் இடையூறு செய்வதாக கூறியுள்ளதாக தெரிகிறது.
அதன் விளைவாகவே, ராமமோகன் ராவ் உள்பட கார்டன் வட்டாரத்திற்கு நெருக்கமானவர்களை வளைத்தது வருமான வரித்துறை என்கிறார் ஒரு அதிமுக மூத்த நிர்வாகி!
இதற்கு ஏற்றார் போல, பிரதமரை டெல்லிக்கு சென்று பார்த்து விட்டு வந்த பிறகு சசிகலாவை இதுவரை நேரில் சென்று சந்திக்காத முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அதை பற்றி யோசிக்காமல் தனது முதல்வர் பணியை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.